தனுஷ்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Rashmika mandana pair with Dhanush
நடிகர் தனுஷின் தனது 51வது திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவருடைய தனது 40வது பிறந்த நாளை தனுஷின் 51வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தனுஷின் 51வது படத்தில், தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
English Summary
Rashmika mandana pair with Dhanush