#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள்! உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 

போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியது தெரிய வரவே, நடிகை ரியா மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். 

நடிகை ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பிரபல தமிழ் நடிகை ரகுல்பிரீத் சிங், இந்தி நடிகை சாராஅலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்ப படலாம் என்ற தகவல் வெளியாகியது. மேலும் தீபிகா படுகோன் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கூட சிக்குவார்கள் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ragul Preeth Singh and Deepika Padukon Drug Smuggling Case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->