ஆஸ்கர் வென்ற குறும்படத்தின் நாயகன் தர்மபுரியில் என்ன செய்கிறார்? புதிய தகவலுடன் பாராட்டு தெரிவித்த அன்புமணி! - Seithipunal
Seithipunal


சினிமாத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதானது இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய தரப்பில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதும், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்று ஆவணக் குறும்படத்திகு சிறந்த குறும்படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது. 

ஆஸ்கர் வென்றவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருப்பதுடன், தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் கதை நாயகர்களான பொம்மன் மற்றும் பெல்லி இணையரை யானைகளுக்கு செய்து வரும் சேவைகளுக்காக பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின்  நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் மரகதமணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன் - பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.  அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள்!

ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரிப்பதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  பொம்மன் - பெள்ளி இணையரின் தியாகம் போற்றத்தக்கது.  இப்போதும் கூட தருமபுரியில் அண்மையில் இறந்த 3 யானைகளின் குட்டிகளை தேடும் பணியில் பொம்மன் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கு பாராட்டுகள்!" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Leader Anbumani Congratulate to Oscar winners from India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->