பத்து தல படத்திற்கு தேதி குறித்த படக்குழு.! வெளியான அறிவிப்பு.!
Pathu thala release Date March 30
சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.
படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர். அடுத்ததாக சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இத்தகைய சூழலில், இன்று காலை 11 மணிக்கு பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என ஏற்கனசே பட குழு அறிவித்து இருந்தபடி ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன் படி வரும் மார்ச் 30-ல் பத்து தல ரிலீஸாகும்.
English Summary
Pathu thala release Date March 30