காதலியை கரம்பிடித்த 'பரிதாபங்கள்' கோபி.! நெட்டிசன்கள் வாழ்த்து.!
paridhapangal gopi getting married
பிரபல யூட்யூப் பிரபலமான கோபி தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கரம் பிடித்துள்ளார்.
கல்லூரியில் சேர்ந்து படித்த நண்பர்களான கோபி மற்றும் சுதாகர் இருவரும் youtube-ல் பிரபலமான பரிதாபங்கள் சேனலை துவங்கினார்கள். இவர்கள் செய்யும் எதார்த்தமான நகைச்சுவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, இருவருமே நல்ல பிரபலமானார்கள். இந்த பரிதாபங்கள் சேனல் குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது. இளைஞர்களிடம் இவர்களுடைய நகைச்சுவை கலந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து இவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கூட கிடைத்தது. மீசையை முறுக்கு, யாஷிகா நடித்த ஜாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவர்கள் நடித்துள்ளனர். தங்களது சோசியல் மீடியா அறிவையை பயன்படுத்தி தற்போது இருவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக கோபியும் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரிடமும் வாழ்த்துகளை பெற்று வருகிறது.
English Summary
paridhapangal gopi getting married