"ஒத்த செருப்பு அளவு 7" - திரைவிமர்சனம்..! கட்டாயம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம்..!!
otha seruppu movie review tamil
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்தீபன் எழுதி., இயக்கி., நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஒத்த செருப்பு அளவு 7 . இந்த படத்தோட இசையமைப்பு பணியை சந்தோஷ் நாராயணனும்., backround score சி.சத்யாவும் பண்ணி இருக்கிறார்.. எடிட்டர் ஆர்.சுதாகரனோட எடிட்டிங் மற்றும் Bioscope Film Framers production என்று தன்னுடைய படத்துக்கு தேவையான குழுவை பாத்து பாத்து அமைத்துள்ளார்..
இந்த செய்தி குறித்து வீடியோ பதிவு;
இந்த படம் 1 September 2019 (Singapore South Asian Film Festival) ல release செய்யப்பட்ட நிலையில., இந்தியாவில் செப்டம்பர் 20 ஆம் தேதியான இன்று release செய்யப்பட்டது.. இந்த படத்தின் திரைக்கதை., இயக்கம் மற்றும் நடிப்பு என்று அனைத்து பணிகளையும் பார்த்தீபன் தனியாக செய்ததால்., Asia Book of Records மற்றும் India Book of Records - இல் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு இதுக்கு மேல என்ன பெருமை வேண்டும் என்று நினைத்தால்.. எப்பேற்பட்ட கல்லா இருக்குற மனசையும் உருக வைக்கிற படம் தான். படத்தின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை பார்த்தீபனை மட்டுமே மையமாக வைத்து கதை நகர்ந்தாலும்., எந்த விதமான சலிப்பும் இல்லாமல் படத்தோடு நம்மை கட்டிப்போட வைத்திருக்கார்.

தன்னோட திறமை எல்லாத்தையும் படம் முழுவதும் ., ஒவ்வொரு இடத்திலும்., பார்த்து பார்த்து விதைகளா விதைத்துள்ளார்... இப்போதுள்ள காலகட்டத்தில் அவசியமான மற்றும் ஆழமான கருத்து உள்ள திரைப்படங்களை அனைவரும் விரும்பும் சமயத்தில்., இந்த படம் அதற்கான தகுதிகளை சிறப்பாகவே அமைத்துள்ளது.... சில காட்சிகள் நமக்கே தெரியாமல் கண்ணீரும் வந்தது பார்த்தீபனின் திறமை தான்.
வாழ்வியல் நுணுக்கம், எப்படியாவது முன்னேறிவிடமாட்டோமா? இந்த உலகத்தில் நாம் மட்டுமில்லாது., நம்மை நம்பி வந்த மனைவி மற்றும் குழந்தை என்று ஒவ்வொன்றையும்., அவ்வுளவு அற்புதமாக புரிந்துகொண்டு., தன்னுடைய திறமையை முழுவதுமாக உபயோகம் செய்துள்ளார்... கண்டிப்பா குடும்பத்தோடு காண வேண்டிய படம்..
Tamil online news Today News in Tamil
English Summary
otha seruppu movie review tamil