தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து! புதிய சர்ச்சையை கிளப்பிய பாலிவுட் ட்வீட்
new controversy storms kollywood regarding aishwarya and dhanush divorce
தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிய இவர் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை என ஹாட்ரிக் வெற்றிகளை அடித்து தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார்.
2004 ஆம் ஆண்டு இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடைபெற்றது. 17 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த இந்த தம்பதியினருக்கு லிங்கா மற்றும் யாத்திரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு இவர்கள் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி கடுமையாக உழைத்து வருகின்றனர். தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் திரை விமர்சகரான உமர் சந்து இவர்கள் இருவரது விவாகரத்திற்கான காரணம் இதுதான் என ட்விட்டரில் பதிவிட்டு திரை உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்படி பெயர் குறிப்பிடப்படாத ஒரு நடிகையுடன் தனுஷ் பல மாதங்களாக கள்ளக்காதலில் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே இந்த தம்பதியினர் மன கசப்பு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் தனுஷ் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
new controversy storms kollywood regarding aishwarya and dhanush divorce