கணவருக்காக ஓவரா பாடுபடும் லேடி சூப்பர் ஸ்டார்.! இளம் நடிகருக்கு ஸ்கெட்ச்.!
nayanthara trying hard to debut his husband vignesh shivan in bollywood
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடித்தவர். சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை கண்டு அதையெல்லாம் ஜெயித்து இன்றும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிம்புவின் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரவுடிதான் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். சமீப காலமாக இவரது திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இவரும் நடிகை நயன்தாராவும் நீண்ட காலமாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

தல அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றுவிட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலிலிருக்கும் விக்னேஷ் சிவனை பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகப்படுத்த நயன்தாரா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தமிழில் தனது மார்க்கெட் சரிந்திருந்தாலும் ஹிந்தியில் அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவனையும் மும்பைக்கு அழைத்துச் சென்று பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகப்படுத்த இவர் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. பாலிவுட் இளம் நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
nayanthara trying hard to debut his husband vignesh shivan in bollywood