லேடி சூப்பர் ஸ்டாரின் 75-வது பட அப்டேட்.! ரசிகர்களே தயாரா.?!
Nayanthara 75th film will be anounce soon
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தனுஷ் வரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். மேலும் தனது தனித்துவமான நடப்பு திறமையாலும் ஸ்டைலாலும் லேடி சூப்பர் ஸ்டாரான ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நீண்ட நாட்கள் காதலித்து வந்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதிக்கு வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் சற்று பின்னடைவையே சந்தித்திருக்கிறது. அவரது நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின.

திருமணத்திற்கு முன் கமிட்டான ஜவான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதிய பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த நயன்தாராவிற்கு அவரது 75 வது திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்று இன்று மாலை 4 மணி அளவில் வெளியாக இருக்கிறது. ஜி ஸ்டூடியோ சவுத் இந்த அறிவிப்பினை தனது பீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் நயன்தாராவின் 75வது திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என பதிவிடப்பட்டுள்ளது. இதனால் நயன்தாராவின் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Nayanthara 75th film will be anounce soon