"அந்த மனசு தான்" கொட்டும் மழையில் நயன்தாரா செய்த காரியம்! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடுபவர் நயன்தாரா. கடந்த 18 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் இவர். ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில்  கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படத்திற்கான பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் நயன்தாராவுடன், ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், கிங்ஸ்லி  உள்ளிட்ட பலர் இந்தத் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். நீல் கிருஷ்ணாய்த் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  விக்னேஷ் சிவனுடைய குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்று வந்தனர். அவர்கள் இருவருக்கும் போதாத நேரம் என்பது போல் சில தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் சென்று அவரது குலதெய்வத்துக்கு  வழிபாடு செய்துவிட்டு திரும்பினர்.

புது குலதெய்வ கோவிலுக்கு போய் வரும் வழியில் சாலைகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு உணவு பொருட்களையும் போர்வையையும் வழங்கினர். அப்போது பெய்து கொண்டிருந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையில் குடை பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கிய காட்சி தற்போது யூட்யூபில் வைரலாகி வருகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nayan and wikki helps out poor people who living in the road


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->