படப்பிடிப்பில், மயங்கி விழுந்து.. உதவி இல்லாததால் உயிரிழந்த நடிகர்.! அதிர்ச்சியில் திரையுலகம்.!  - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றின் காரணமாக கிட்டத்திட்ட ஐந்து மாதங்களுக்கு பின் சமீபகாலமாக தான் சினிமா வேலைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில்  பிரபல நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது திரையுலகத்தைச் சார்ந்த சிலரின் திறப்புகள் ரசிகர்கள் மத்தியில் கவலையாக உருவெடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வடிவேலு பாலாஜி அவர்களின் உயிரிழப்பு திரை உலகை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகரும் குரல் மாற்று நிபுணருமான ரபீக் ஒரு விழிப்புணர்வு காணொளிக்காக படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது அந்த இடத்தில் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. பின்பு அவரது வாகனத்திலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த ஒளிப்பதிவாளர், அவரின் தொண்டை வறட்சியின் காரணமாக வறண்டு போய் உள்ளது என்று தண்ணீர் கேட்டதாகவும் தண்ணீர் குடித்த ஒரு சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்ததாகவும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

malayala actor death on shooting spot 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->