"மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க..." அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி மனம் திறந்தார் மாளவிகா ஸ்ரீநாத்.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமா உலகில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் மாளவிகா ஸ்ரீநாத். இவர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மதுரை திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த வருடம் வெளிவந்த நிவின் பாலியின் சாட்டர்டே நைட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் பலராலும் நன்கு அறியப்பட்டவர்.

அதன்பிறகே சில படங்களிலும் நடித்து  இன்றிருக்கும் இளம் கதாநாயகிகளில் முன்னணியில் இருக்கிறார். சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாள சினிமாவில் நடைபெறும் காஸ்டிங் கவுச் பற்றி மனம் திறந்து இருக்கிறார் மாளவிகா ஸ்ரீநாத்.

மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் படம் ஒன்றில் அவருக்கு மகளாக நடிப்பதற்கு ஆடிசன் நடைபெற்று இருக்கிறது. அப்போதுதான் இவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் தர சொல்லி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் மஞ்சு வாரியரின் படத்தில் மகளாக நடிப்பதற்கு வாய்ப்பு காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தன்னிடம் தனி அறையில் வைத்து ஆடிஷன் நடத்தி வேறொரு அறைக்குச் சென்று தலை முடியை சரி செய்ய வருமாறு கூறி பின்னர் அந்த அறையில் இருக்கும் போது ஆடிஸன் பார்த்த நபர்களில் ஒருவர் தவறாக நடக்கு முயன்றதாக தெரிவித்திருக்கிறார். தான் எப்படியோ அங்கிருந்து தைரியத்தை வரவழைத்து தப்பி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை மூன்று சம்பவங்கள் இதுபோல நடைபெற்று இருப்பதாகவும் கூறி அதிர வைத்திருக்கிறார் மாளவிகா ஸ்ரீநாத்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

malavika shreenath exploits about casting couch


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->