ஓடிடியில் 'லியோ' - ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Leo on OTT Release Date Announced
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் ரூ. 148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து உலக அளவில் ரூ. 540 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Leo on OTT Release Date Announced