ட்ரெண்டிங்கில் லியோ ஆடியோ லான்ச்! டிக்கெட் ரெடி?! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பெரிய நட்சித்திர பட்டாளமே நடித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ளதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை மெறுகேற்றி வருவதாக தகவல் கசிந்துள்ளது. 

மேலும், இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளதாகவும், படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகளின் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியான அந்த டிக்கெட்டில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரபூர்வ செய்தி இல்லை. ஒருவேளை ஆர்வக்கோளாறில் ரசிகர்கள் 10 டிக்கெட்டை அடித்து பரபரப்பை உண்டாக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Audio Launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->