'பல குடும்பத்தை கெடுத்தவ' லக்‌ஷ்மி ராமக்கிருஷ்ணனிடம் பாய்ந்த வனிதா.! ட்விட்டரில் குழாயடி சண்டை.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் நடைபெற்றதாக கூறி இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் நடிகை வனிதா அது திருமண கொண்டாட்டம் தான், திருமணம் அல்ல. விரைவில் நாங்கள் பதிவு திருமணம் செய்து கொள்வோம். அதற்குள் பீட்டர்பால் தன்னுடைய மனைவியிடம் விவாகரத்து வாங்கி விடுவார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குநரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் தெரிவித்த ஒரு கருத்துக்கு கொந்தளித்த வனிதா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், "வனிதாவின் செய்தியை இப்பொழுதுதான் பார்த்தேன். ஏற்கனவே, திருமணமாகி சிக்கலாகி உள்ளது. படிப்பு மற்றும் அனுபவமுள்ள ஒருவர் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்தது மிகவும் தவறு." என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து வனிதா மிகவும் ஆக்ரோஷமாக, "உங்களுடைய கரிசனத்திற்கு மிகவும் நன்றி. எனக்கு நீங்கள் அறிவுரை கூற நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ, அல்லது குடும்பத்தை கெடுக்கும் உங்களுடைய நிகழ்ச்சியிலோ பங்கேற்கவில்லை. எனக்கு சட்டம் தெரியும். என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்கு ஆதரவு தேவையில்லை. என் முடிவுகளுக்கு ஆலோசனையும், ஆதரவும், அங்கீகாரமும் உங்களிடமிருந்து எனக்கு தேவை இல்லை. இது பொது பிரச்சனை இல்லை.' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Ramakrishnan fight with Vanitha on Twitter 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal