சூர்யாவுக்கு ஜோடியாகும் 18 வயது இளம் நடிகை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாலா இயக்கும் சூர்யா படத்தில் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தவர் இயக்குனர் பாலா. அந்த படத்தில்தான் சூர்யா என்ற நடிகரை இந்த உலகம் அடையாளம் கண்டது. அதன்பிறகு பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான வேடத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் நடிகர் சூர்யாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து. சுமார் 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும் பாலாவும் இணைந்துள்ளனர். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கிறார். வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் சென்னை புறநகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதனால் சூர்யாவின் 41வது படம் வாடிவாசலா அல்லது பாலா படமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 41வது படத்தை பாலா இயக்குகிறார் என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயதான இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krithy Shetty pair with Surya in bala movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->