நடிகர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது எப்படி? அவரது மகன் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நடிகரும் திருவாடை தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினருமான கருணாசுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தொற்று உறுதி செய்யப்படும் முன் அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததை தொடர்ந்து கருணாசுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு.

இதையயடுத்து அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கென் கருணாஸ் வெளியிட்ட பதிவில், “என் தந்தை அரசியல்வாதியாக இருப்பதால் கடந்த சில நாட்களாக அவரது தொகுதியான திருவாடை தொகுதியில் உள்ள பல்வேறு ஊருகளுக்கு சென்றதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். கொரோனாவுக்காக  சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போதைக்கு சீராக உள்ளது. நானும் எனது அம்மாவும் பாதுகாப்பாக இருக்கிறோம். எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள். தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து தேவையில்லாமல் தங்களது வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karunass son explain about his father corona positive


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal