"தனுஷ் பையன் சிம்பு மாதிரியா இருப்பான்.?!" கருணாஸ் மகனின் நச் கேள்வி.!
Karunas son about dhanush and his son
தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ், வித்தியாசமான கோணத்தில் பல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்துள்ளார். அவரது நடிப்பை பாராட்டும் விதமாக பல விருதுகளும் வாங்கியுள்ளார்.
தனுஷ் இறுதியாக நடித்த படம் வாத்தி. இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடித்துள்ளார். கென் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறிய பதில் தான் தற்போது படு வைரலாகி வருகிறது.

அவரிடம் தொகுப்பாளர் நடிகர் தனுஷின் மகன் லிங்கா அவரைப் போலவே இருக்காரே இது பற்றி நீங்கள் நடிகர் தனுஷிடம் கேட்டுஇருக்கின்றீர்களா? என இங்கிதம் இல்லாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கென், "தனுஷின் மகன் தனுஷை போல் அல்லாமல் வேறு எப்படி இருப்பார்? அப்படி இல்லன்னா தான் கேள்வி கேட்கணும்.? தனுஷின் பையன் தனுஷ் போல அல்லாமல் சிம்பு போலவா இருப்பாரு?" என்று கூறியுள்ளார்.இது தற்போது இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Karunas son about dhanush and his son