நம்ம கஸ்தூரியா இது.?! 6 வருடங்களுக்கு முன் மாடர்ன் உடையில் ஸ்டைலான புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கம்பம் மீனா. தற்போது துணை நடிகையாக இருக்கின்ற இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் நடந்தது. 

அதன் பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்டாக கம்பம் மீனா பணிபுரிந்துள்ளார். மிகவும் தைரியமாக வலம் வந்த அவர் அப்போதே அந்த சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரபலமான பெண்ணாக இருந்துள்ளார். 

இதன் பின்னர் பாரதிராஜாவுடைய தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் கம்பம் மீனாவை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார். கிராமத்து வழக்கு மொழியில் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் மீனாவுக்கு இந்த சீரியல் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. 

இதன் பின்னர் அவர் வெள்ளித்திரையில் சில திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை கம்பம் மீனா தமிழில் 25 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடித்து வருகின்றார். இவரது வாழ்க்கை வரலாறு பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் தற்போது அமைந்துள்ளது. 

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக ஃபன்னி வீடியோக்களை வெளியிட்டு பலரையும் எண்டர்டைண்ட் செய்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் 6 வருடங்களுக்கு முன்பு மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kambam meena photo 6 years ago


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->