மேடையில் மனைவி செய்த செயல்.. ஏ.ஆர்.ரகுமான் அதே இடத்தில் பண்ணிய காரியத்தால் கரகோஷம்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான். இசைப்புயல் என்று அழைக்கப்படும் இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் கோல்டன் குலோப் விருதையும் வென்ற முதல் இந்தியர் ஆவார்‌.

இவரது இசையமைப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான்  தனது மனைவி சாய்ரா பானுவுடன்  விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏ. ஆர். ரஹ்மான் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மனைவியை மேடைக்கு வரும்படி  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தனர். அதனைத் தொடர்ந்து சாய்ரா பானுவும் மேடைக்கு வந்தார்.

விழா மேடையில் அவர் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த ஏ. ஆர் ரகுமான் தமிழில் பேசும் படி செல்லமாக கட்டளையிட்டார். இதனைக் கேட்டதும் ரசிகர்களிடமிருந்து பலத்த கரகோஷம்  அரங்கையே அதிரசெய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

isai puyal ar rahman request to his wife for tamil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->