நான் அவர் மேல் சந்தேகம் அடைந்திருக்க கூடாது.. மேகி திரைப்பட நடிகையின் ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திகேயன் ஜெகதீஷ் இயக்கத்தில்., இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன் இசையமைப்பில்., இன்னும் பல திரையுலக பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மேகி (MAGGY).. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் இசைசேர்ப்பு போன்று அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவு பெற்று., தணிக்கைக்குழு ஒப்புதல் அளித்து திரைக்கு வரவுள்ளது. 

இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ள நிலையில்., ஒரு கதாநாயகியான நிம்மி தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து தற்போது மனம்திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியவாதவது., மேகி திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த திரைப்பட வாய்ப்பு எனக்கு முகநூல் மூலமாக கிடைத்தது. 

எனது டப்மாஷ் பார்த்த பின்னர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கார்த்திகேயன் சாரை சென்று பார்த்த பின்னர்., அவர்கள் எந்த விதமான சலனமும் இல்லாமல்., எங்களின் படத்திற்கு உங்களை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளோம். உங்களது முடிவை கூறுங்கள் என்று சொன்னார்.

maggy, maggy images,

எனக்கு ஒரே படபடப்பு.. யோசனை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறினேன்.. இப்போதே கூறுங்கள்.. அவசரம்.. அடுத்த வாரம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்று தெரிவித்தார். குறைந்தபட்சம் இரண்டு நாள் என்றும் கூறிப்பார்த்தேன்.. முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.. இந்த சமயத்தில்., திரைத்துறையில் உள்ள போலி நபர்கள் குறித்து எனக்கு ஐயம் வந்துவிட்டது. இருந்தாலும் சம்மதித்தேன். 

கூறியபடியே ஒரே வாரத்தில் படப்பிடிப்பிற்கு அழைத்து சென்று அணைத்து பணிகளையும் துவக்கினார்கள். இருந்தாலும் என்னால் நம்ப இயலவில்லை. இயக்குனரிடம் சென்று இப்படம் வெளியாகுமா? என்று சந்தேகத்துடன் தளர்ந்த குரலில் கேட்டேன்.. இது அவரின் மனதை அப்போது பாதித்திருந்தாலும்., நம்பிக்கையுடன் கட்டாயம் குறித்த தேதியில் படத்தை வெளியிடுவேன் என்று தேதியையும் கூறினார்.  

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவில் விறுவிறுப்பான படப்பதிவு என நம்பிக்கையுடன் அனைவரும் பணியாற்றி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளோம். இந்த படம் அனைவரும் பார்க்கும் வகையில் விறுவிறுப்பு., காமெடி மற்றும் திகில் நிறைந்த கதையாக இருக்கும். எனது சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் முதலில் கேட்ட கேள்விக்காக இப்போது வருத்தப்படுகிறேன் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in maggy movie actress nimmy speech about director karthikeyan jagdeesh


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal