படம் பிடிக்கலைன்னா என்ன செருப்பால அடிங்க....விஷ்ணு விஷால் வழங்கும் "ஹாட்ஸ்பாட் 2" - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷால் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்,  அடுத்தபடியாக இயக்கிய  படம் ஹாட்ஸ்பாட். இந்த படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை மக்கள்  திரையரங்கிற்கு வந்து பார்க்கும் படியும் அப்படி படம் நன்றாக இல்லாவிட்டால் தன்னை செருப்பால் அடிக்கும்படி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார். திரையரங்கத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ள நிலையில், கே.ஜே.பி. டாக்கிஸ், மற்றும் செவன் வாரியர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தினை நடிகர் விஷ்ணு விஷால் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இப்படத்தின் அறிவிப்பு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய நடிகர் விஷ்ணு விஷால்,  “ஹாட் ஸ்பாட் 2  நல்ல படம் என்றும், நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும், ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம், கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான், அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன், ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hit me with slippers if you don like the movie Vishnu Vishal Hotspot 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->