அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கப்போவது, அந்த சுறுசுறுப்பு நடிகரை தானாம்.!
H Vinoth direct Next movie with dhanush
சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் இயக்குனர் எச்.வினோத். இவர் அதன்பின் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார்.
அதன் பின் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற எச்.வினோத் முதன் முதலில் மேற்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களையும் வினோத் இயக்கினார். சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார். இவர் தற்போது நகைச்சுவை ஜானரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக கமல் அல்லது தனுஷின் படத்தை வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் தனுஷை வைத்து அவர் படம் பண்ணுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், வெளியான தனுஷின் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. ஆகவே, எச்.வினோத்துடன் கைக்கோர்க்க தனுஷும் தயாராகி விட்டதாகவே கூறப்படுகிறது.
English Summary
H Vinoth direct Next movie with dhanush