கோல்டன் ஸ்பேரோ பாடல்..100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை! - Seithipunal
Seithipunal


கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இப்படங்களையடுத்து, தனுஷ் இயக்கி இருக்கும் படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படம்  இந்தமாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இப்படம் ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கோல்டன் ஸ்பேரோ பாடலைப் பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்படத்தில் அடுத்து வெளியான காதல் பெயில் ஆந்தமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதனைத்தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.  இது தனுஷ் நடிக்கும் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில், திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியானது. அதன்படி, 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.அடுத்ததாக அமரன் திரைப்பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Golden Sparrow Song Crosses 100 million views


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->