தமிழ்த் திரையுலகமே சோகத்தில்! பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு மாரடைப்பால் இன்று காலமானார்.

பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

ராட்சசன், மரகத நாணயம், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் டெல்லி பாபு. 

இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த தயாரிப்பாளர் டெல்லி பாபுவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "எங்கள் ராட்சசன் தயாரிப்பாளரான டில்லிபாபு சாரின் இழப்பில் நான் இன்னும் அதிர்ச்சியில் வாயடைத்து இருக்கிறேன். 

பெரிய விஷயங்களைப் பார்க்கும் பார்வையும், பெரிய கனவுகளும் கொண்ட மனிதராக இருந்தார். அவற்றை சாத்தியமாக்குவதற்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உண்மையிலேயே கனவு காண்பவர். 

இது உலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தி உண்டாகட்டும் ஐயா.


மரகத நாணயம் இயக்குனர் ARK சரவணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் எனக்கு ஒரு வாழ்க்கையை கொடுத்தவர்..

ஒரு நல்ல மனிதரை.. 
ஒரு நல்ல தயாரிப்பாளரை.. 
ஒரு சாதனையாளரை..
தமிழ் திரையுலகம் இழந்து விட்டது..

மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது சார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Film Producer Dilli Babu death


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->