கண்ணிருக்கும் எல்லோரும் தூங்க தான் செய்வார்கள்! நகையை திருடிய போது அசந்து தூங்கிய திருடன்...!
Everyone who has eyes will sleep thief who fell asleep while stealing jewel
ஜார்க்கண்ட்டில் மேற்கு சிங்பூமின் சந்தை பகுதியில் காளி கோவிலுள்ளது. சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.அப்போது நள்ளிரவு நேரம், மர்மநபர் ஒருவன் கோவிலின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு கோவிலுக்குள் புகுந்துள்ளான்.

அதன் பிறகு அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கீரிடம் உள்ளிட்டவைகளை திருடியுள்ளான்.அப்போது அவனுக்கு தூக்கம் கண்ணை கட்டியுள்ளதுபோல.இதனால் சிறிது நேரம் தூங்கி விட்டு செல்லலாம் என நினைத்துள்ளான்.அதனால் கோவில் கருவறைக்குள் தரையில் படுத்து,கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கிவிட்டுள்ளான்.
இதனால் அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி கருவறையில் ஒருவன் தூங்கி கொண்டு இருந்ததையும், அவன் அருகே நகைகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இது பற்றி அவர் ஊருக்குள் ஓடோடி சென்று விஷயத்தை சொன்னார். இதையடுத்து ஊர் மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்ததுடன், காவலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போதும் அந்த மர்மநபர் எழுந்திரிக்கவில்லை. காவலரும், பொதுமக்களும் அவனை தட்டி எழுப்பினார்கள், இதனால் திடுக்கிட்டு எழுந்த மர்மநபர் தன் முன் காவலர் நிற்பதை பார்த்து அங்கிருந்து ஓட முயன்றான்.உடனே காவலர்கள் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். ,மேலும் விசாரணையில் அவனது பெயர் வீர் நாயக் என்பது தெரியவந்தது.
கோவிலுக்குள் திருடுவதற்காக நுழைந்ததாக அவன் காவலரிடம் தெரிவித்தான். அவன் தூங்கியதால் திருடு போக இருந்த நகைகள் தப்பியது.மேலும், காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
English Summary
Everyone who has eyes will sleep thief who fell asleep while stealing jewel