திருமணத்திற்கு தாயாரான இந்தி டு தெலுங்கு கதாநாயகி...! யார் இவர்..? - Seithipunal
Seithipunal


தனது சிறந்த நடிப்பால் சிறுவயதிலேயே பிரபலமடைந்தவர் நடிகை 'அவிகா கோர்'. கடந்த 2008-ல் வெளியான இந்தி டி.வி. தொடர் “பாலிகா வது”வில் “ஆனந்தி” வேடத்தில் நடித்த அவர், பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்.திரைப்பட உலகில் அவர் “மார்னிங் வாக்” (2009) மூலம் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கு திரைத்துறையில் நடித்த “உய்யாலா ஜம்பலா” படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தொடர்ந்து தெலுங்கில் பல ஹிட் படங்களில் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இதன் மூலம் அதிக ரசிகர்கள் மத்தியில் தனக்கென வலுவான இடத்தை பெற்றார்.இந்நிலையில், அவிகா கோர் விரைவில் மணமகளாகத் தயாராகி வருகிறார்.

சமூக ஆர்வலர் மிலிந்த் சந்த்வானியை அவர் திருமணம் செய்ய உள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இவர்களின் திருமணம் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

சின்னத்திரையிலிருந்து சினிமா வரை ரசிகர்களின் அன்பை பெற்ற அவிகா கோரின் வாழ்க்கையில், இப்போது புதிய அத்தியாயம் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindi to Telugu heroine who became mother after marriage Who this


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->