சொகுசு கார்கள் கடத்தலா...? -பிரித்விராஜ் மற்றும் துல்கர் வீடுகளில் சுங்கத்துறை திடீர் சோதனை...! - Seithipunal
Seithipunal


கேரளா திரையுலகை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம். முன்னணி நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இதில் சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுவரை சந்தேகத்திற்கிடமான எந்த வாகனமும் கைப்பற்றப்படவில்லை.மேலும், கோழிக்கோடு, கொச்சி, மலப்புரம் உள்ளிட்ட கேரளா முழுவதும் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

அண்மையில் பிரித்விராஜ் இயக்கிய “எம்புரான்” படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர், அந்த பட தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையும், பிரித்விராஜ்க்கு வருமானவரி நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், பிரித்விராஜ்–துல்கர் வீடுகளில் நடந்துள்ள இந்த புதிய சோதனை, கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Luxury cars being smuggled Customs raids Prithviraj and Dulquers homes


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->