சென்னை மற்றும் வட தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் 3 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு...!
Chance rain thunder and lightning 3 days Chennai and North and South Tamil Nadu
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதில் வட தமிழகம் மற்றும் தென் பகுதிகளில் கடுமையான மழை பெய்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் அடுத்த 3 நாட்களாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக, இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை காணப்படலாம்.

அதுமட்டுமினின்றி, 25 மற்றும் 26-ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பும் உள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான அபாயம் உள்ளது.
இதனால் வெப்பநிலை குறைந்து, பொதுமக்களுக்கு குளிர்ச்சியான மற்றும் மென்மையான காலநிலை அனுபவமாகிறது.
English Summary
Chance rain thunder and lightning 3 days Chennai and North and South Tamil Nadu