காந்தாரா சாப்டர் 1: சினிமாவுக்கு செல்ல 3 விதிகள்...? நெட்டிசன்கள் கிண்டல் குவியல்!- விளக்கம் கொடுத்த ரிஷப் ஷெட்டி
Gandhara Chapter 1 3 rules going cinema Netizens full sarcasm Rishabh Shetty explains
கடந்த 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம், வெறும் குறைந்த பட்ஜெட்டில் உருவானாலும், தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் இந்திய திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த இந்த படம், வசூலில் ரூ.400 கோடிக்கும் மேல் குவித்து, கன்னட திரையுலகின் வரலாற்றில் பொற்குறி பதித்தது.

அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ அடுத்த மாதம் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.33 கோடிக்கு வியாபாரமாக விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், நேற்று வெளியான காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அதற்குப் பின்பு, படக்குழுவினரால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது.அந்த போஸ்டரில், “திரைப்படத்தை பார்க்கும் முன் 3 விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது:
மது அருந்தக் கூடாது
புகை பிடிக்கக் கூடாது
அசைவ உணவு சாப்பிடக் கூடாது
இந்த விதிமுறைகள் காந்தாரா ரசிகர்களிடம் சற்றே ‘ஷாக்’ தரும் வகையில் இருந்தன. இதனால் தமிழ்நாட்டு நெட்டிசன்கள் இதை பார்த்தவுடனே, “இந்த மாதிரி ரூல்ஸ் போட்டா, தமிழ்நாட்டுல ஒருத்தன் கூட காந்தாரா படம் பார்க்க மாட்டான்!” என்று சிரிப்புடன் கிண்டல் அடித்து வருகின்றனர்.
English Summary
Gandhara Chapter 1 3 rules going cinema Netizens full sarcasm Rishabh Shetty explains