நெருப்பு வளையம்’ சூரிய கிரகணம்...! வானை தரையில் கொண்டு வந்த Google ...! -தேடலில் உயிர்ப்பெற்ற விண்வெளி அனிமேஷன்! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (பிப்ரவரி 17) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வானியல் ஆர்வலர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் கூகுள் தனது முதன்மை தேடல் பக்கத்தில் சிறப்பு அனிமேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மெய்நிகர் காட்சி, பயனர்கள் இணையத்தின் வழியே கிரகணத்தை நேரில் காணும் உணர்வை அளிக்கிறது.“Solar Eclipse”, “Surya Grahan” போன்ற முக்கிய சொற்களை தேடல் பட்டியில் உள்ளிடும் போது, முடிவுகள் திறக்கும் தருணத்தில் சூரியனை சந்திரன் மெதுவாக மறைக்கும் இயக்கத்தை பிரதிபலிக்கும் கிராஃபிக் திரையில் தோன்றுகிறது.

இன்றைய கிரகணம் வளைய வடிவில் இருப்பதால், ‘நெருப்பு வளையம்’ போல ஒளிரும் காட்சி அதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வகை கிரகணத்தில், சந்திரன் சூரியன் முன் நகர்ந்தாலும் முழுமையாக மறைக்காது.

அதனால் சூரியனின் வெளிப்புற ஒளிச்சுற்று தெளிவாக தெரிந்து, சந்திரனைச் சுற்றி தீப்பொறி வளையம் போல பிரகாசம் உருவாகிறது. இந்த அபூர்வ காட்சியை அனிமேஷன் மிக இயல்பாக மீண்டும் உருவாக்குகிறது.

இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:26 மணிக்கு தொடங்கி மாலை 7:57 மணிவரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் சூரியன் அடிவானத்திற்குக் கீழே இருப்பதால், இந்தியாவில் இருந்து நேரடியாக காண முடியாது.

‘நெருப்பு வளையம்’ கிரகணம் அண்டார்டிகா மற்றும் தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட தெற்கு அரைக்கோள பகுதிகளில் தெளிவாகப் புலப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ring Fire solar eclipse Google brought sky ground Space animation comes life search


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->