பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி நபர் கைது...! - நாடுகடத்தல் நடவடிக்கை தீவிரம்...!
Indian origin man arrested harassement charges Deportation process intensified
சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க அமைப்பான U.S. Immigration and Customs Enforcement (ICE) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
New Jersey மாநிலத்தில் வசித்து வந்த வொடெலா யஷஸ்வி கோட்டப்பள்ளி என்ற நபர், 13 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது மற்றும் பொதுச் சாந்தியை குலைத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசாரால் பிடிபட்டார்.

இந்த கைது குறித்து ICE வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிய இவர் மீது பாலியல் குற்றங்கள் மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாடுகடத்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை அவர் காவலில் வைக்கப்படுவார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Donald Trump அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஆவணமின்றி குடியேறியவர்களுக்கு எதிரான கண்காணிப்பும், கைது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குற்றச்சாட்டுகள் உள்ள வெளிநாட்டவர்களின் விவரங்களை ICE பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனுடன் தொடர்பாக, கடந்த டிசம்பரில் Oregon மாநிலத்தில் இருவர் உயிரிழந்த விபத்தில் தொடர்புடைய இந்திய லாரி ஓட்டுநரின் வழக்கையும் ICE வெளியிட்டது. அந்த நபர் Arizona வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, பின்னர் California மாநிலத்தில் பணி அனுமதி மற்றும் வணிக ஓட்டுநர் உரிமம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கனரக சரக்கு வாகனங்களை இயக்கும் ஆவணமற்ற இந்திய ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். சமீப மாதங்களில் Florida மற்றும் கலிபோர்னியாவில் இடம்பெற்ற குறைந்தது மூன்று பெரிய விபத்துகளும் இதேபோன்ற சட்டவிரோத ஓட்டுநர்களுடன் தொடர்புடையதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொடர் சம்பவங்கள், குடியேற்ற விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்பதைக் காட்டும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றன.
English Summary
Indian origin man arrested harassement charges Deportation process intensified