நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி- திருச்செந்தூர் வளாகங்களில் பதற்றம்…! - காவலர்கள் தீவிர சோதனை
Bomb threat courts Tension Tirunelveli Thiruchendur campuses Police conduct intensive searches
திருநெல்வேலி -திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கம்போல் இன்று காலை பணிகளைத் தொடங்கியது. இந்த வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

நீதிபதிகள் வருவதற்கென தனி நுழைவாயில், பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான வாயில், வழக்கறிஞர்களுக்கான தனி வாயில் என மொத்தம் மூன்று நுழைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் காவல் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் இடம் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும்
, இன்று காலை நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு “வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்ற அச்சுறுத்தல் தகவல் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் முழுமையான சோதனையில் இறங்கினர்.
நீதிபதிகளின் ஓய்வு அறைகள், நிர்வாக அலுவலகங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மெட்டல் டிடெக்டர் மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டன. இந்த தீவிர நடவடிக்கையால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் நிலவியது.கடந்த மாதமும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், திருச்செந்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் இன்று காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது. குறிப்பிட்ட நேரத்தில் குண்டு வெடிக்கும் என கூறப்பட்டதால், அங்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இதனால் இரு நீதிமன்ற வளாகங்களிலும் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.
English Summary
Bomb threat courts Tension Tirunelveli Thiruchendur campuses Police conduct intensive searches