ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகிறது? - படக்குழு அதிரடி அறிவிப்பு..!!
jananayagan movie first single update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் எச். வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
காரணம் இந்தப்படம் தான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் ஆகும். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'ஜன நாயகன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளதாகவும், இந்தப் பாடலுக்கு விஜய் குரல் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
jananayagan movie first single update