வாளின் நுனியில் பாதுகாவலர் உயிர்...! - பவன் கல்யாணின் பரபரப்பு செய்கை...! - வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான 'பவன் கல்யாண்' நடிப்பில் வெளியாக இருக்கும் “They Call Him OG” திரைப்படத்தின் முன்னோட்ட விழா ஐதராபாதில் விமரிசையாக நடைபெற்றது.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஒரு சின்ன தவறு பெரிய விபத்தாக மாறியிருக்கக் கூடும் என்ற சூழ்நிலை உருவானது.இதில் மேடைக்கு உற்சாகத்துடன் வந்த பவன் கல்யாண், கையில் வைத்திருந்த வாளை சுழற்றிய தருணம், அது நேராக அவரது பாதுகாவலரின் அருகே பாய்ந்தது.

அப்போது நூலிழையில் தப்பித்த அந்த பாதுகாவலர், மிகப்பெரிய விபத்திலிருந்து உயிர் பிழைத்தார்.இந்த காட்சி நிகழ்ச்சி இடத்திலிருந்தவர்களுக்கு சில நொடிகள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகிக் கொண்டிருக்கிறது.மேலும், வீடியோவை பார்த்த பலரும், “மக்களின் முன்னிலையில் இப்படிப்பட்ட ஆபத்தான சாகசம் தேவையா?” எனக் கேள்வி எழுப்பி, பவன் கல்யாணின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

life guardian tip sword Pawan Kalyans sensational act Viral video


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->