நண்பர்கள்தான் சப்போர்ட்..5 ஆண்டு காதல்..மாமன் மகளுக்கு தாலி கட்டிய TTF வாசன்!
Friends are the support 5 years of loveTTF Vasan tied a talisman to his uncle daughter
TTF வாசன் என்றாலே சர்ச்சை… சர்ச்சை என்றாலே TTF வாசன்!” – இப்படி பேசும் அளவுக்கு, யூடியூப் சேனலும் பைக் சாகசங்களும் மூலமாக 2K கிட்ஸ் மத்தியில் செம்ம வரவேற்பைப் பெற்றவர் வாசன். எப்போதும் சர்ச்சை, சாகசம், போலீஸ் கண்டனம் என்றே பேசப்பட்ட அவர், திடீரென்று திருமண பந்தத்தில் இணைந்திருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
முதலில், தனது திருமணத்தைப் பற்றி வாசன் வெளியிட்ட வீடியோ வைரலானது. அந்த வீடியோவில்,தனது மாமன் மகள் ஸ்வீட்டுடன் 5 ஆண்டுகளாக காதலில் இருப்பதாகவும்,வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும்,“அவர்களின் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணணும்… மாமனாரை அப்பாவைப் போல பார்த்துக்கொள்ளணும்” என்ற ஆசையையும் பகிர்ந்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, திருமண புகைப்படங்கள், குறிப்பாக தாலி கட்டும், மெட்டி அணிவிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவத் தொடங்கின.
இந்நிலையில், வாசனின் நெருங்கிய நண்பர் அஜீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாசன் மாலையை மாற்றி தாலி கட்டும் வீடியோவை பகிர்ந்து நண்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆனால் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? அந்த வீடியோவிலும் வாசனின் காதல் மனைவியின் முகத்தை காட்டவில்லை! இதுவே ரசிகர்களிடையே இன்னும் அதிக க்யூரியாசிட்டி ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Friends are the support 5 years of loveTTF Vasan tied a talisman to his uncle daughter