நம்மகிட்ட சண்டை போட தகுதியானவர்களே இல்லை - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.!!
deputy cm uthayanithi stalin visit in viruthunagar district
துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் சாத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், "எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள், சோதனைகள், எதிரிகளை நாம் சந்தித்துள்ளோம். நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை.
நம்முடன் சண்டை போடும் அளவுக்கு தகுதியானவர்கள் நாட்டிலேயே இல்லை.
தமிழகத்தை எட்டிக்கூட பார்க்க முடியவில்லையே என்று மத்திய பாஜக அரசு ஏங்குகிறது. திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. 75 ஆண்டுகள் ஆனாலும் திமுக எழுச்சியுடன் இருக்கும் என்றுத் தெரிவித்தார்.
English Summary
deputy cm uthayanithi stalin visit in viruthunagar district