நடிகர் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல் - சுங்கத்துறை அதிரடி.!!
Customs department seized actor dulkar salman cars
கேரளா மாநிலத்தில் உள்ள நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ஆபரேஷன் நும்கூர்" என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த சோதனையின் போது துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
Customs department seized actor dulkar salman cars