விசிக-வின் அடாவடித்தனத்தை, ஜாதி வெறி அரசியலை படம் பிடித்து காட்டுகிறது - பாஜக கடும் கண்டனம்!
bjp narayanan condemn to dmk vck
பாரதிய ஜனதா கட்சி.தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுதுல்லகண்டன செய்தியில், "தர்மபுரி மாவட்டம் அரூரில் பாஜக பெண் நிர்வாகி ரஞ்சிதம் அவர்கள் மீது நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தி மிரட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கேசவன் என்ற ரௌடி ஆபாசமாக பேசி ரஞ்சிதத்தை தாக்கியதோடு, ஜாதி ரீதியாக பேசி இழிவுபடுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல்.
ஆனால், இது வரை விசிக குண்டர்களை காவல்துறையினர் கைது செய்யாதது தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அடாவடித்தனத்தை, ஜாதி வெறி அரசியலை படம் பிடித்து காட்டுகிறது.
விசிக தலைவர் திருமாவளவனின் தூண்டுதலினால் தான் இது போன்ற ஜாதி வெறி அரசியலை அக்கட்சியினர் மேற்கொள்வைத்தால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஜாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
உடனடியாக விசிக வை சேர்ந்த கேசவன் மற்றும் ரௌடி கும்பலை அரூர் காவல் துறை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp narayanan condemn to dmk vck