எடப்பாடி பழனிசாமி வள்ளுவருக்கு காவி சாயம்...? சங் பரிவார் தாக்கத்தில் மாறிய அரசியல்! -கனிமொழி கடும் விமர்சனம்
Edappadi Palaniswami Valluvar saffron dye Politics changed under influence Sangh Parivar Kanimozhi strongly criticizes
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காவி உடை அணிந்த திருவள்ளுவர் உருவப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், பா.ஜ.க. மீது உள்ள அதிகப்படியான நெருக்கமும் விசுவாசமும், எடப்பாடி பழனிசாமியை முழுமையான சங் பரிவார் ஆதரவாளராக மாற்றி விட்டதாக விமர்சித்த அவர், அதே மனப்போக்கில் தற்போது திருவள்ளுவருக்கும் காவி நிற அரசியல் சாயம் பூச முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami Valluvar saffron dye Politics changed under influence Sangh Parivar Kanimozhi strongly criticizes