திருமணத்திற்கு தயாராகும் நடிகர் அர்ஜுன் தாஸ்? கோலிவுட்டில் வைரலாகும் தகவல்! - பொண்ணு யார் தெரியுமா?
Actor Arjun Das getting ready for marriage News going viral in Kollywood Do you know who the girl is
தமிழ் சினிமாவில் தனித்துவமான குரல் மற்றும் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது திருமண செய்தியால் கோலிவுட்டில் பேசுபொருளாகி உள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக பரவி வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அர்ஜுன் தாஸ் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது கம்பீரமான குரல் தான். அந்த தனித்துவமான குரலே அவரை தமிழ் சினிமாவில் தனி இடத்திற்கு கொண்டு சென்றது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் பெரிய அளவில் கவனம் பெற்றார். அதில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, லோகேஷ் தனது அடுத்த படமான “மாஸ்டர்” திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக அவரை நடிக்க வைத்தார்.
அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், அர்ஜுன் தாஸ் கோலிவுட்டின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.இதையடுத்து “விக்ரம்” படத்தில் ரோலெக்ஸ் காட்சிகளில் நடித்ததன் மூலம் மேலும் கவனம் பெற்ற அவர், சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” படத்தில் அஜித்துக்கு எதிரான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
வில்லனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். “அந்தாகாரம்”, “அநீதி”, “ரசவாதி”, “பாம்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவை விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.
தற்போது அர்ஜுன் தாஸ் கைவசம் “லவ்” மற்றும் “ஒன்ஸ் மோர்” ஆகிய படங்கள் உள்ளன. இதில் “லவ்” திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
அதேபோல் “ஒன்ஸ் மோர்” படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் தான் அர்ஜுன் தாஸ் திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, இந்த வாரத்திலேயே அர்ஜுன் தாஸின் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற உள்ளதாம். இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் அர்ஜுன் தாஸ் காதலில் இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் பரவியிருந்தன. இருவரும் ஒன்றாக நடித்த “லவ்” படத்தின் பின்னரே இந்த கிசுகிசுக்கள் அதிகரித்தன.
ஆனால், அந்த தகவல்களை இருவரும் மறுத்து, தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று விளக்கம் அளித்திருந்தனர்.எனினும், தற்போது வெளியாகியுள்ள நிச்சயதார்த்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
English Summary
Actor Arjun Das getting ready for marriage News going viral in Kollywood Do you know who the girl is