விஜய் மீது ராகுல் காந்தி அதிருப்தி? ரத்து செய்யப்பட்ட விஜய் சந்திப்பின் பின்னணி என்ன? எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் விஜயின் சமீபத்திய டெல்லி பயணமும், அதில் நடைபெறாமல் போன ராகுல் காந்தி சந்திப்பும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தேசிய அரசியல் அளவிலேயே கவனம் ஈர்த்த இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தமிழக அரசியலின் மையமாக விஜய் மாறியுள்ளார். கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தாலும், தவெகவின் வளர்ச்சி தேசிய கட்சிகளையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்த சூழலில், காங்கிரஸ் மற்றும் தவெக இடையே நல்லுறவு உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. குறிப்பாக கரூரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆறுதல் தெரிவிக்க விஜயை நேரடியாக தொடர்புகொண்ட முக்கிய தேசிய தலைவர் ராகுல் காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுக கூட்டணியில் இருந்து முதலில் விலகியது காங்கிரஸ். மேலும் விஜயின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி முக்கிய விருந்தினராக பங்கேற்றது அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த விழாவில் ராகுல் காந்திக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பிடித்திருந்ததால் அந்த விவகாரம் பெரிதாக வெளியே வரவில்லை.

இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக விஜய் டெல்லி சென்றது தேசிய அளவில் கவனம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்த விஜய், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியது.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளிக்கையில், “கர்நாடக காங்கிரஸ் விவகாரம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களவை தேர்தல் காரணமாக ராகுல் காந்தி பிஸியாக இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை” என்று கூறினார்.

ஆனால் இதற்கு பின்னால் அரசியல் காரணங்களும் உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்களை தவெக தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வருவது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் தவெக, எதிர்காலத்தில் தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர முயற்சிக்கிறது என்ற சந்தேகம் கூட்டணி கட்சிகளிடையே உருவாகியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, பின்னர் இடைத்தேர்தல் மூலம் தவெக தனியாக 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டிவிட்டால், கூட்டணிக் கட்சிகளின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற கவலை காங்கிரஸுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருப்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் காலியாகும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பதிலாக அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கே தவெக சீட் வழங்கலாம் என்ற தகவலும் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி மேகதாது திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் நீர்வரத்து உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமரிடம் விஜய் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.

இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் கர்நாடக காங்கிரஸ் இடையே முரண்பட்ட அரசியல் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் காவிரி உரிமைக்காக காங்கிரஸ் பேச வேண்டிய சூழல் இருந்தாலும், கர்நாடக காங்கிரஸ் மேகதாது திட்டத்தை கைவிட தயாராக இல்லை.

இந்த முரண்பாடும் விஜய் – ராகுல் சந்திப்பில் ஒரு அரசியல் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் பிரதமருடன் விஜய் நடத்திய சந்திப்பு வெறும் 10 நிமிடங்களே நீடித்தது, பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்காமல் திரும்பியது, ராகுல் சந்திப்பு ரத்து ஆனது போன்ற சம்பவங்கள் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

மத்திய அரசுடனும் நல்லுறவு, கூட்டணி கட்சிகளுடனும் சமநிலை என்ற அரசியல் கணக்கில் விஜய் செயல்படுகிறாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதேநேரத்தில், தவெகவின் வேகமான வளர்ச்சியால் காங்கிரஸ் தனது அரசியல் அடையாளம் பலவீனப்படக் கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi unhappy with Vijay What is the background behind the cancelled Vijay meeting Delhi heads in pain due to MLA hunt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->