ஊழல் செஞ்சா அடுத்த செகண்ட் சீட் காலி...! - அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் விடுத்த மரண மாஸ் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் என். ஆனந்த் பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,“எங்களுக்குத் லஞ்சம் வாங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதேபோல், ஊழலுக்கு இடமளிக்க மாட்டோம் என்பதையும் மிகத் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

ஏனெனில், யாராவது தவறான முறையில் செயல்பட்டால், அடுத்த நிமிடமே அவர்களின் பதவி பறிக்கப்படும்.ஊழல் செய்தால் அடுத்த விநாடியே முதல்-அமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதனால், மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல்களில் எங்களால் ஒருபோதும் ஈடுபட முடியாது.நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு நேர்மையான சேவை செய்வதற்காகவே இந்த பயணத்தில் இணைந்துள்ளோம்.

வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.மக்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாக அறிந்து, அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இன்று தவெகவில் இணைந்து வருகின்றனர்.

தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால், அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பார்கள். எந்தக் கட்சியில் இருந்து வந்தாலும், தவெகவில் அனைவருக்கும் உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If there corruption next second seat vacant Minister N Anands death masse warning government officials


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->