பிசிசிஐ-யின் உயர்மட்ட ஓய்வூதியப் பிரிவின் கீழ் தகுதி பெற்ற அஜிங்யா ரஹானேவுக்கு மாதம் பென்ஷன் எவ்வளவு தெரியுமா..? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் துணை கேப்டன், கொல்கத்தா அணியின் கேப்டனுமானஅஜின்க்யா ரஹானே, கடந்த ஜூலை 30 அன்று அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் வெற்றிகளுக்குப் பலமுறை தூணாக நின்றவர் ரஹானே. அவரின் திடீர் ஒய்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுக்குப் பிறகும் முன்னாள் வீரர்களின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் நோக்கில் பிசிசிஐ (BCCI) ஓய்வூதியத் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரஹானேவும் பயனடைய உள்ளார். இந்திய அணிக்காக அவர், 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள்ளார். இந்நிலையில், பிசிசிஐ-யின் உயர்மட்ட ஓய்வூதியப் பிரிவின் கீழ் அவர் தகுதி பெறுகிறார்.

இதன் மூலம், ரஹானேவுக்கு மாதந்தோறும் ரூ. 70,000 நிலையான ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது, முன்னாள் வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 70,000 ஆக உயர்த்தப்பட்டது.

பிசிசிஐ-யின் விதிகளின்படி, இந்த மாதாந்திர ஓய்வூதியம் தொடர ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அதாவது, ரஹானே எதிர்காலத்தில் பிசிசிஐ-யின் கீழ் அதிகாரப்பூர்வப் பயிற்சியாளராகவோ (Coach) அல்லது நிர்வாகப் பொறுப்புகளிலோ (Administrator) இணைந்து சம்பளம் பெறத் தொடங்கினால், அவருக்கு வழங்கப்படும் இந்த ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ரஹானே பற்றி முக்கியமாக சொல்லவது என்னவென்றால், கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில், விராட் கோலி இல்லாத சூழலில் தற்காலிகக் கேப்டனாகப் பொறுப்பேற்று இந்திய அணியை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடர் வெற்றிக்கு வழிநடத்தினார். இது ரஹானேவின் கிரிக்கெட் பயணத்தின் முத்திரைப் பதிவாகக் இன்றும் கருதப்படுகிறது.

தற்போது ஓய்வு பெற்றுள்ள ரஹானே, அடுத்த தலைமுறை இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக (Mentor) செயல்பட விரும்புவதாகத் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know how much Ajinkya Rahanes monthly pension is from the BCCI


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->