"இடைத்தேர்தலில் தவெக அபார வெற்றி!": மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளைக் கைப்பற்றியது — சட்டசபையில் பலம் 109 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற மதுராந்தகம் (86.26% வாக்குப்பதிவு) மற்றும் தாராபுரம் (80.30% வாக்குப்பதிவு) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரு தொகுதிகளிலுமே அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

மதுராந்தகம் தொகுதி வெற்றி:

21 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமனை விட 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் பரந்தாமன் 2-ஆம் இடத்தையும் (43,916 வாக்குகள்), அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3-ஆம் இடத்தையும் (38,770 வாக்குகள்) பெற்றனர்.

தாராபுரம் தொகுதி வெற்றி:

23 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சுகன்யாவை விட 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் சுகன்யா 2-ஆம் இடத்தையும் (52,400 வாக்குகள்), அதிமுக வேட்பாளர் பானுமதி 3-ஆம் இடத்தையும் (41,078 வாக்குகள்) பிடித்தனர்.

தவெக சட்டசபை பலம் உயர்வு: இந்த இரு தொகுதி வெற்றியின் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்: இடைத்தேர்தலில் கிடைத்த இந்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மற்றும் பனையூர் தவெக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Sweeps Tamil Nadu Bypolls Wins Madhuranthakam Dharapuram; Assembly Strength Rises to 109


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->