"பழநி பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்!": 2 சிறுவர்களின் விளையாட்டுத்தனமான செயல்... திண்டுக்கல் எஸ்.பி. விளக்கம்; தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்!
Dindigul SP Clarifies 2 Minors Responsible for Human Waste in Palani School Water Tank Headmaster Issued Show-Cause Notice
பழநி அருகே மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கிடந்த சம்பவத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களின் விளையாட்டுத்தனமான செயலே காரணம் என்றும், இதில் எந்த துர்நோக்கமும் இல்லை என்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணி: காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது குடிநீர் தொட்டியில் கழிவு கிடந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவத்தைப் பள்ளி நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மூடி மறைத்ததாகக் கூறி, அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை விசாரணை & எஸ்.பி. விளக்கம்: சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து, 40 பேரிடம் விசாரணை நடத்தினார். காலாண்டு விடுமுறையின் போது பள்ளி வளாகத்தில் கபடி விளையாடிய 2 சிறுவர்களில் ஒருவர் மலம் கழிக்க, அதை மற்றொரு சிறுவன் விளையாட்டுத்தனமாகக் குடிநீர் தொட்டியில் போட்டது விசாரணையில் தெரியவந்தது.
சிறுவர்களுக்கு கவுன்சிலிங்: தவறு செய்த சிறுவர்களுக்குக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் தொடர்பான கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.
தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்: இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு மூடி மறைக்க முயன்ற தலைமையாசிரியர் ஜெயக்குமாருக்கு, திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) செல்வக்குமார் 17A நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Dindigul SP Clarifies 2 Minors Responsible for Human Waste in Palani School Water Tank Headmaster Issued Show-Cause Notice