'போதைப்பொருள் பழக்கம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்துவிடும்; பிரதமர் நரேந்திர மோடி..! - Seithipunal
Seithipunal


போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருபவர்களை சமூகம் ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பளித்து மதிக்க வேண்டும் என்றும், சிறிது நேரத்திற்கு மட்டுமே போதையை தரும் போதைப் பொருள்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்துவிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை (Nasha Mukta Yuva campaign) காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். 

அப்போது பேசிய மோடி கூறியதாவது;

எதிரி நாடுகள் நமது நாட்டின் எதிர்காலமான இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருபவர்களை சமூகம் ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பளித்து மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன்,  சிறிது நேரத்திற்கு மட்டுமே போதையை தரும் போதைப் பொருள்கள், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்துவிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாடு முழுவதும் 100 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் 01 கோடி இளைஞர்கள் பங்கேற்புடன்  நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Narendra Modi says drug addiction can ruin your entire life


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->