பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 05 காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
14 people including 05 policemen killed in Pakistani suicide attack
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அமைதிப் பேரணியின் போது இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள கபல் காவல் நிலையம் அருகே ஸ்வாத் அமைதி ஜிர்கா என்ற உள்ளூர் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திதுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தீவிரவாதத்திதுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றனர். காவல் நிலையம் அருகே வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 05 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகக் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
English Summary
14 people including 05 policemen killed in Pakistani suicide attack