ஆகஸ்ட் 30-இல் முதுநிலை நீட் தேர்வு; ஆயத்தப் பணிகளை மேற்கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி நட்டா..! - Seithipunal
Seithipunal


மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத் தேர்வான (NEET-PG) நீட் -2026 வரும் ஆகஸ்ட் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 2,73,183 தேர்வர்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 12.5% அதிகமாகும். குறித்த தேர்வு, சுமார் 340 நகரங்களில் உள்ள 1,300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படவுள்ளது.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்வினை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி நட்டா இன்று (01.08.2026) ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வின் போது, தேர்வை நடத்துவதில் ஈடுபட்டுள்ள தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம், தொழில்நுட்ப அமைப்புகள், பிற தரப்பினரின் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்துள்ளார்.

அத்துடன், தேர்வு ஏற்பாடுகள், தேர்வர்களுக்கான வசதி நடவடிக்கைகள், பாதுகாப்பு கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த தலையீடுகள் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது.

மேலும், நேர்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணிக்காத்து, நியாயமான, வெளிப்படையான, தேர்வர்களுக்கு உகந்த தேர்வை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்த தேர்வு தொடர்பான வதந்திகள் அல்லது மோசடியான கூற்றுக்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Health Minister JP Nadda has undertaken preparatory work for the NEET exam


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->