''ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்''; 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவியை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர்; நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்த 11 வகுப்பு மாணவி தனது வீட்டின் முன் இருக்கும் 60 அடி ஆழமுள்ள கிணறில் விழுந்து உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்து தீயணைப்புத் துறையினர் வரும்வரை அந்த மாணவியை காப்பாற்றி பாதுகாத்து வைத்துள்ளார். பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பத்திரமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தன்னுடைய உயிரை கூட, துச்சமென நினைத்து கிணற்றில் இறங்கி மாணவியை காப்பாற்றிய ஆசிரியர் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகளை ஆணுக்கு கூடிய போதிக்கலாம் பாரி நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ..? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மாணவி, குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் ராஜனின் மகளாவார். பெயின்டிங் வேலை செய்து வரும் ராஜனுக்கு இரண்டு பெண் குழந்தைகள்  உள்ளனர். இவர்கள் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் முன் சுமார் 60 அடி ஆழமுள்ள உறைகிணறு உள்ளது. இன்று மாலை வேளையில் ராஜனின் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மூத்த மகள் திடிரென கிணற்றில் விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சத்தம்போட்டு கதறியுள்ளனர்.  அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கொல்லங்கோடு தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்து தகவலறிந்து நிலைய அலுவலர் ராஜேஷ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வருவதற்குள் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் கூடி நின்ற கூட்டத்தை ஒதுக்கிவிட்டு தனது உயிரையும் துச்சமென நினைத்து கிணற்றுக்குள் இறங்கி மாணவியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிய மாணவியை நீண்ட நேரம் போரடி வலை கூடை பயன்படுத்தி உயிருடன் காப்பாற்றி மேல்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர் அங்கு தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது குறித்த மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கிணற்றில் குதித்து மாணவியை காப்பாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் நிலைய அலுவலரை பொதுமக்கள் பாராட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Retired teacher who risked his life to save a student who fell into a 60 foot deep well in Kumari


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->